| பயிர் பாதுகாப்பு  :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
                   
                
                | 
             
           
         
     
        
          
            நுனிக்குருத்துப் புழு:  சிர்ப்போபேகா எக்ஸ்செர்ப்டாலிஸ்                  
             | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - இப்பூச்சியின் புழுக்கள் கரும்பின் நுனிப்பகுதியில் அதிகம் காணப்படும்.  வளரும் இளந்திசுக்களைத் துளைத்து, உட்சென்று, தண்டின் சாறுள்ள பகுதியை அடைந்துவிடும்.  
 
                - வளர்ந்த கரும்பில் நடுக்குருத்து காய்ந்து விடும். இதனை இழுத்தால் எளிதில் வெளிவராது. 
 
                - வளர்ந்து வரும் இலைகளில் இணைவரிசையில் சிறு சிறு துளைகள் காணப்படும். 
 
                - நுனிக்குருத்தில் பூச்சியினால் துளைக்கப்பட்ட துளைகள் காணப்படுவதோடு, கரும்பின் நுனியில் கிளைப்புகள் தோன்றி பார்ப்பதற்கு முடிக்கொத்துப் போல் தோன்றும். 
 
              | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                நடுக்குருத்து காய்தல் | 
                துவாரங்கள்  | 
                நடுத்தண்டில் துளைகள் | 
                முடிக்கொத்து தோற்றம் | 
               
              | 
           
          
            பூச்சியின் விபரம்: 
              
                -                   முட்டை:மேல் சோகையின் அடிப்புறம் நடுநரம்பின் அருகில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். இம்முட்டைக் கூட்டங்கள் ரோமங்களால் சூழப்பட்டிருக்கும்.  10-80 முட்டைகள் வரை ஒரே கூட்டமாகக் காணப்படும்.                
 
                -                   இளம்புழு: வெள்ளை நிற மென்மையான உடலில் சிகப்பு நிற கோடு நடுவே காணப்படும்.  இதன் தலை மஞ்சள் நிறமாக இருக்கும். 
 
                 
                - கூட்டுப்புழு: கூடானது புழு வெளியேறக்கூடிய ஒரு பக்க துளையுடன் கட்டப்பட்டிருக்கும்.  கூட்டுப்புழுப் பருவம் 6-21 நாட்கள். 
 
                 
                - பூச்சி :  வெள்ளை நிறமாகவும், வயிற்றுப்பகுதிக்கு கீழ் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற ரோமங்கள் பெண் பூச்சியில் கொத்தாக காணப்படும். 
 
                | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                முட்டை | 
                இளம்புழு | 
                கூட்டுப்புழு | 
                பூச்சி  | 
               
              | 
           
          
            | கட்டுப்படுத்தும் முறை:
               உழவியல் முறைகள்:  
              
                - கோ 419, கோ 745, கோ 6516 போன்ற எதிர்ப்பு இரகங்கள் அல்லது கோ 859, கோ 1158, கோ 7224 போன்ற தாக்குதலைத் தாங்கி வளரக் கூடிய இரகங்களைப் பயிரிடலாம். 
 
                - சோகை பரப்பிப் பின் மண் அணைத்தல் செய்யலாம். 
 
                - வெள்ளைச் சோளம், மக்காச் சோளம் போன்றவற்றை ஊடுபயிராக இடுதல் கூடாது. 
 
                - இரட்டைப் பார் முறையைத் தேர்வு செய்வது சிறந்தது. 
 
                - குருத்து வாடியுள்ள பயிர்களை நீக்கி அழித்து விடலாம். 
 
               
              இயற்பியல் முறைகள்:  
              
                - முட்டைக் குவியலை சேகரித்து அழித்து விடவும். 
 
                - இப்பூச்சித் தாக்குதல் கண்ட நாளிலிருந்து 4 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முட்டைக் குவியலைச் சேகரிக்க வேண்டும். 
 
               
              உயிரியல் முறைகள்:  
              
                - முன் கூட்டுப்புழு ஒட்டுண்ணியான கேம்பிராய்டஸ் (ஐசோதிமா) ஜாவென்சிஸை 100 ஜோடிகள்/ ஹெ என்ற அளவில் வயலில் விடலாம். 
 
                - ஒட்டுண்ணிகளால் அழிக்கப்படாத முட்டைக் குவியலை சேகரித்து 30 சல்லடை நைலான் பைகளில் போட்டு வைத்தால், முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் அழிக்கப்படும். 
 
               
              வேதியியல் (அ)  இரசாயன  முறைகள்:  
              
                - வெப்ப மண்டலப் பகுதிகளில் 3வது புழுக்கள் வெளி வருவதற்கு 10 நாட்களுக்கு முன் கார்போஃபியூரான் 3 ஜி 1 கி.கி ர.ஐ (a.i)/ஹெ அல்லது திம்மெட் ஜி 3 கி.கி a.i /ஹெ குருணைகளை இடலாம். 
 
                - வேர் மண்டலத்திற்கு அருகே சிறு பாத்தி அமைத்து குருணைகளை இட்டுப் பின் சிறிது நீர் பாய்ச்சலாம். 
 
                | 
           
          
            Content Validators:  
              Dr.V.Jayakumar, Senior Scientist (Plant Pathology), Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
              Dr.T.Ramasubramanian, Senior Scientist (Entomology), Division of Crop Protection, Sugarcane Breeding Institute, Coimbatore -641007.  
              Dr.M.Ravi, Assistant Professor (Entomology), Krishi Vigyan Kendra, Sirugamani- 639115.               
                             Source of Images: 
            http://agropedia.iitk.ac.in/sites/default/files/8%20pupae.jpg | 
           
               
  |